தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை திடீரென குமரவேலின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, 30 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.