மலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கிழக்குப் பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் இந்த மலை அடிவாரத்தில் எம்.ஜி.ஆர் நகர், மலையடிப்பட்டி, அழகை நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலை உச்சியில் இருக்கும் ராமர் கல் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு காற்றின் வேகத்தால் அது பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறு சிறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.