கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். ஆறு குட்டி, சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனிப்படை போலீசாரிடம் இருந்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.