செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, கொடநாடு வழக்கு தொடர்பாக காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த எங்களின் இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்துள்ளார்கள். காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவலாளி ஓம் பகதூர் மற்றும் தாய், குழந்தை மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.