Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு சம்பவம் : ராஜேஷ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளது – எம்.எல்.ஏ செல்வபெருந்தகை..!!

கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் ராஜேஷ்குமார் நாவலை விட மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்..

கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் ராஜேஷ்குமார் நாவலை விட மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது. கொடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர மனு அளிக்கப்பட்டுள்ளது.

90 நாட்களில் பிணையில் வந்த சயானும், மனோஜும் டெல்லி சென்று பேட்டி அளித்தது ஏன்?.. தைரியமிருந்தால் சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டியது தானே.. எதற்காக இவர்கள் அச்சப்படுகிறார்கள்.. எதற்காக பயப்படுகிறார்கள்.. மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இந்த ஆட்சி கண்டிப்பாக நீதி வழங்கும்.. அதற்கான உண்மையை வெளிக்கொண்டுவரும்.. சரியான பாதையில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது.
என்று தெரிவித்துள்ளார்..

Categories

Tech |