ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஈபிஎஸ் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக பதிலளித்துள்ளார்..
தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து, தமிழகத்தில் கோடநாடு விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. தேர்தல் அறிக்கையில் திமுக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.. அதை தான் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்த தமிழக சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பெல்லாம் செய்தது..
மு.க ஸ்டாலின், சட்டப்படியாக விசாரணை நடைபெறும்.. அரசியல் தலையீடு இருக்காது.. யாரும் பயப்படத் தேவையில்லை என்று கூறினார்.. இருந்தாலும் இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட அதிமுக முக்கிய புள்ளிகள் பெயர் அடிபடுவதாக சொல்லப்படுகிறது.. தற்போது 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.. ஒவ்வொரு நாளும் பரபரப்புடன் விசாரணை நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் நீங்கவில்லை என்று திமுக எம்.எல்.ஏ சுதர்சனம் தெரிவித்தார்.. இதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்கு உள்ளதால் பேரவையில் பேசுவது முறையல்ல.. ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்..
இதனையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றே உறுப்பினர் சுதர்சனம் பேசினார்.. வழக்கு நடைபெறுவதை தான் பேசுகிறார்.. வழக்கின் உள்ளே சென்று விவரத்தை பேசவில்லை,அதனால் அவைக்குறிப்ப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்று கூறினார்..