கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்கள் அளித்ததாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகியோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கனகராஜ் 2017 ஏப்ரல் 27இல் மர்மமான முறையில் சாலை விபத்தில் இறந்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி நிலையில் அவருடைய சகோதரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.