விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், காளி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன்-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. மேலும் இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். டிடி ராஜா மற்றும் சஞ்சய் குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.