இயக்குனர் சங்கர் இயக்கும் புதிய படத்திற்கு கோடி கோடியாக செலவு செய்து வருகிறாராம்.
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் எடுக்கும் எல்லா படங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அதே போல் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருக்கிறார்.
இதனை அடுத்து ஷங்கர் தயாரிக்கும் இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் 23 கோடி ரூபாய் செலவு செய்துள்ளாராம். அதோடு இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்கு சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்துள்ளாராம் இயக்குனர் ஷங்கர். தற்போது இந்த செய்தி திரை வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ‘ஆர்சி 15’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்காக இயக்குநர் ஷங்கர் அதிகம் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப்படம் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தனது ஸ்ரீவெங்கடேஷ்வரா புரடெக்ஷன்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். இப்படம் அந்நிறுவனத்தின் 50-வது படம் ஆகும். மேலும் அடுத்த ஆண்டு இந்தப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார்.