பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்தையும் ஒன்றாக இணைத்து நாம் நினைத்ததை சாதிக்க உதவும் ஒரு முத்திரை குபேர முத்திரை .
குபேர முத்திரை தியானம் தியானம் இருந்தால் அவர் வாழ்வில் சிறப்பாக இருப்பார். கோடீஸ்வரனாக ஆகும் யோகமுண்டு. இந்த முத்திரை செய்தால் நமக்கு பஞ்சபூதங்களின் அருள் கிடைக்கும். குபேர முத்திரை பிரம்ம முத்திரை என்றும் சொல்லலாம். காலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் விளக்கேற்றி பூஜை அறையில் சம்மணமிட்டு நிமிர்ந்த நிலையில் கண்களை மூடிக்கொண்டு கட்டை விரலின் நுனியில் பாதியில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்க்க வேண்டும் .
அதன்பிறகு மோதிர விரல் மற்றும் சுண்டு விரலை மடக்கி வைக்க வேண்டும். இந்நிலையில் நீங்கள் இந்த யோகாவை செய்து வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த முத்திரையை நாம் செய்யும் முன்பாக இறைவனிடம் மனமுருகி வேண்ட வேண்டும். அவ்வாறு செய்யும் போது இந்த முத்திரையின் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். நம்மால் எவ்வளவு நேரம் செய்ய முடியுமோ அவ்வளவு நேரம் செய்யலாம்.
இந்த முத்திரையை ஒருவர் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை முழுமையாக அளிக்கும். நேர்மறை திறனை பெருக்கி ஆற்றலை வெளிப்படுத்தும். நம் உடலில் விசுக்தி மற்றும் சக்கரங்கள் இயங்க தொடங்கும். இதனால் நம் மூளைக்கு ஒருவித ஆற்றல் கிடைக்கும். செல்வம் சேர்ப்பதற்கு மட்டும் இல்லாமல் நாம் எதை நினைத்தாலும் அதை அடைவதற்கான வலியையும் ஏற்படுத்தும். எனவே இந்த முத்திரையை பயன்படுத்தி பலன் அடையுங்கள்.