கோடைகாலத்தில் நாம் எப்படிப்பட்ட பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் அழிவை ஈடு செய்வதில் பழங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது . மற்ற பருவ காலங்களில் விளையும் பழங்களை விட கோடைக் காலத்தில் கிடைக்கும் பழங்களை ஊட்டச்சத்தை கொண்டிருக்கும். அவற்றின் சுவையும், சத்துக்களும் அதிகமாக இருக்கும். கோடைக்கால பழங்களில் அதிகம் சேர்ப்பது உடலுக்கு குளிர்ச்சியையும் சக்தியையும் அளிக்கும்.
இருப்பினும் சில கோடைக்கால பழங்கள் அதிக சர்க்கரையும்,கலோரியும் கொண்டிருக்கும். கோடைக்கால பழங்களில் மாம்பழத்திற்கு முதலிடம் . அமெரிக்காவில் ஆய்வு படி 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரி உள்ளது. குறைந்த கலோரி உணவை சாப்பிடுகிறவர்கள் மாம்பழத்தை தேர்ந்தெடுக்கலாம். தர்ப்பூசணி, முலாம் பழங்கள் அதிக அளவில் விளையும். 100 கிராம் தர்ப்பூசணி பழத்தில் 30 கலோரி இருக்கிறது. முலாம் பழத்தில் 34 கலோரி உள்ளது. உஷ்ணத்தை குறைக்க இதனை சாப்பிடுவது ஆரோக்கியமானது.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 23 கலோரிகள் இருக்கிறது. அதை அதிகம் விளையக்கூடிய லிச்சி பழத்தில் அதிக கலோரிகள் உள்ளது. சிவப்பு நிறப் பழங்கள் இனிப்பு உணவுகள் சேர்க்கப்படுகிறது. பழச்சாறாகவும் சாப்பிடலாம். கோடை காலங்களில் சாத்துக்குடியை நாம் சாப்பிடும் போது அதிக அளவு சத்துக்கள் நம் உடம்பிற்கு கிடைக்கிறது. பப்பாளிப் பழத்தில் 46 கலோரிகள் இருக்கிறது . இது எடையை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவும் நாம் பழங்களை அதிகமாக சாப்பிடுவது மிகவும் நல்லது மற்றும் உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனை பெற்று பழங்களை சாப்பிட வேண்டும்.