Categories
லைப் ஸ்டைல்

கோடையில் உடல் சூடு தணிய கற்றாழை ஜூஸ் குடிங்க… உடலுக்கு அவ்வளவு நல்லது.. !!!

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கோடை வெயில் உடலுக்கு எப்போதும் உஷ்ணத்தை ஏற்படுத்தும். அதனால் வயிற்றுப்போக்கு, வயிறு வலி மற்றும் வெனீர் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கை வைத்தியமாக உணவு முறையில் இந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அதன்படி கற்றாழை ஜூஸ் குடித்தால் பல பயன்கள் கிடைக்கும். தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சலை நீக்கும். மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகள் குறைய உதவும். கண்களில் எரிச்சலை போக்கும். வயிற்றுப்புண் ஆற உதவும். வயிற்றில் எரிச்சலை சரிசெய்யும். வெயிலில் இருந்தும் மூல நோயில் இருந்தும் நம்மைக் காக்கும். மலச்சிக்கல் நீங்க உதவும்.

Categories

Tech |