Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோடை காலத்திற்கு இதமான… அருமையான ருசியில்… சுவையான ஜூஸ்…!!

ஜிஞ்சர் மோர் செய்ய தேவையான  பொருட்கள் :

மோர்                                – 2 கப்
பச்சை மிளகாய்          – 1
இஞ்சி                               – சிறு துண்டு
கறிவேப்பிலை            – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
பெருங்காயத்தூள்     – ஒரு சிட்டிகை
உப்பு                                 – தேவையான அளவு

செய்முறை:

முதலில் இஞ்சியை எடுத்து தோல் நீக்கி கொள்ளவும். பின்பு தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து, மிக்ஸிஜாரில் போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

மேலும் பாத்திரத்தில் மோரை எடுத்து, அதில் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, நறுக்கிய கொத்துமல்லி தலையைப் போட்டு நன்கு கலந்து பரிமாறினால், ருசியான ஜிஞ்சர் மோர் ரெடி.

Categories

Tech |