கோடை காலங்களில் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாமல் தவிர்ப்பது மிக நல்லது.
கோடை காலம் தொடங்கி விட்டதால் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நம் உணவுப் பழக்கங்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். அதன்படி கோடைக்காலங்களில் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. உடலை மேலும் சூடாக்கி பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக நீரிழப்பை ஏற்படுத்தும்.
வெயிலுக்கு தாகம் தணிக்க ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த தண்ணீர் நன்றாக இருந்தாலும் இது ஜீரணத்தை பாதிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். எனவே குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் காபி ஆல்கஹால் வேண்டாம். கபைன் கலந்த காபி மற்றும் ஆல்கஹால் பானங்கள் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் கோடை காலங்களில் தவிர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இதனை கொடுத்தால் பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் ஏற்படும்.