நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது.
கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் உண்டாகும் எரிச்சலையும் விரைவில் குணப்படுத்தும்.
நுங்கு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி உடலை குறைக்க உதவுகிறது. நுங்கில் உள்ள நீரானது பசியை தூண்டும்.
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு அருமருந்தாக உள்ளது. அதிகம் தாகம் எடுத்து தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது அப்படிப்பட்டவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறிவிடும். இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக், வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவந்தால் அதனுடைய எரிச்சல் தணியும், இதேபோன்று அம்மை, அக்கி கொப்பளங்களுக்கு மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தி வரலாம்.
நுங்குவில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் மெல்லிய பருத்தி துணியை நனைத்து எடுத்து, கண்களில் மேல் பற்றாக வைக்கும் பொழுது, கண்களில் ஏற்பட்டிருக்கும் சிவப்பு தன்மை மறைந்து விடும். கண்களில் ஏற்படும் சோர்வும் கூட எளிதில் சரி ஆகிவிடும்.
கண் நோய்களுக்கு நுங்கு நீர் பலன் அளிக்கும். அற்புதமான சிறந்த மருந்தாக விளங்குகிறது, நுங்கு உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. தோல் மீது ஏற்படும் கொப்புளங்களை மறைய வைத்து விடும்.
மோருடன் இளம் நுங்கு மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படும் வெள்ளைப்போக்கு குணமாகும். நுங்குவின் தோலில் உள்ள துவர்ப்பு தன்மை வயிற்றுப் போக்கை சரி செய்து புத்துணர்வை அழிக்க கூடியது. கோடைகாலத்துக்கு ஏற்ற உணவு நுங்கு, சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை அதிகம் கிடைக்கிறது.