சென்னை பாம்புபூங்கா சார்பாக கோடை நிகழ்ச்சியானது வரும் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஒரு மாதம் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அந்தபூங்கா சார்பாக கூறியிருப்பதாவது, “பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் காணப்படும் பாம்புகளை பற்றி நடைமுறையான அறிவை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்குவதற்காகவே கோடைகாலம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பாம்புகள் சண்டையிடும் சம்பவங்கள் மற்றும்பாம்புகள் கடிபடுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனினும் ஏராளமான பாம்புகள் விஷத்தன்மை உடையவை அல்ல. பல்வேறு நேரங்களில் விஷமற்ற பாம்பு கடித்தால் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அதே சமயத்தில் விஷபாம்புகள் கடித்தால் புறக்கணிக்கப்படுகிறது. இது நம் சுற்றுப்புறத்திலுள்ள பாம்புகளுடைய உரிய அறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் நடைபெறுகிறது. விஷப்பாம்பு கடித்து பாதிக்கப்பட்டவர்களின் அலட்சியப்படுத்தியதால் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் பாம்புகள் மற்றும் அதன் கடிகளை குறித்த அடிப்படையான அறிவு யாருக்கேனும் இருப்பின், அவை கடித்துவிட்டால் ஏற்படும் விளைவுகளைக் காப்பாற்றுவது எளிது ஆகும். ஆகவே பாம்புகள் மற்றும் அது கடிக்கும் தன்மை பற்றி அறிந்துகொள்ளவும், ஆபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் எங்களின் நிகழ்ச்சியானது உதவியாகயிருக்கும்.
சுற்றுச்சூழல் மற்றும் மனிதவாழ்வில் பாம்புகளின் நன்மையான பங்கினை கலந்துகொள்பவர்கள் அறிந்து கொள்வார்கள். திட்ட கட்டணம் ரூபாய் 1000 நபர், ஒரு பெற்றோருடன் கூடிய குழந்தைக்கு ரூபாய் 1500 ஆகும். செவ்வாய் தவிர்த்து அனைத்து நாட்களும் நிகழ்ச்சி நடைபெறும். வரும் ஜூன் 1 ஆம் தேதி துவங்கும் நிகழ்ச்சி ஜூன் 30ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கிடையில் வரும் 23 ஆம் தேதி முதல் பதிவு தொடங்குகிறது. மின்னஞசல் முகவரி [email protected], [email protected], cspt.res gmail.com ஆகும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.