Categories
மாநில செய்திகள்

கோடை விடுமுறை: தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்த மாதம் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இதனிடையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் பிற நாட்களில் வரத்தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

இந்நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து மே 14 ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் ஜூன் 13ஆம் தேதி மீண்டுமாக பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |