Categories
மாநில செய்திகள்

கோடை விடுமுறை நிறைவு…. ஜூன் 6ல் பள்ளிக்கு வரவும்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு…. !!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மற்ற வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என  புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5ம் தேதியுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை நடத்தும் எண்ணும் எழுதும் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் பங்கேற்கும் வகையில் கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |