Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோடை விழா…. மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி… “கொடைக்கானல் அந்தோணியார் அணி சாம்பியன் பட்டம்”….!!!!

கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் நடைபெற்ற  மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் அந்தோணியார் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திண்டுக்கல் மாவட்டம்,கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் இரண்டு தினங்களாக நடந்தது. அதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு கொடைக்கானல் டேஞ்சரஸ் புட்பால் அணியும், கொடைக்கானல் அந்தோணியார் அணியும், விளையாட தகுதி பெற்றுள்ளது.

அதன் பின் நடந்த இறுதிப்போட்டியில் கொடைக்கானல் அந்தோணியார் ராணி டேஞ்சரஸ் புட்பால் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், ஆர்.டி.ஓ முருகேசன், சுற்றுலா அலுவலர் சிவராஜ், புனித பீட்டர் பள்ளி தாளாளர் ரோகன் சாம்பாபு உட்பட பலர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். இன்று புதன்கிழமை மினி மாரத்தான் போட்டி கொடைக்கானல் ஏரி சாலையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மற்றும் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |