கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் வினாடிக்கு 1,500 கன அடி முதல் 2 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அணையில் வினாடிக்கு 1,098 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர் வரத்து கோடைகாலம் என்பதால் வினாடிக்கு 785 கன அடி தண்ணீர் குறைவாக வருகிறது. இந்த அணையில் 1500 கன அடி வீதம் தண்ணீர் குடிநீர் தேவைக்கு திறந்து விடப்படுகிறது. அணையில் திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைவாக இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையும் வாய்ப்பு உள்ளது.