கோடை வெயிலின் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் இந்த பானத்தை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.
கோடை வெயில் உடலுக்கு எப்போதும் உஷ்ணத்தை ஏற்படுத்தும். அதனால் வயிற்றுப்போக்கு, வயிறு வலி மற்றும் வெனீர் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கை வைத்தியமாக உணவு முறையில் இந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பது பற்றி முதலில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பசுந்தயிர்- 1 கப்
நெல்லிக்காய் – 6
கொத்தமல்லி தழை- கால் கப்
புதினா இலை- கால் கப்
கருவேப்பிலை- 10
இஞ்சி நறுக்கியது- ஒரு பெரிய ஸ்பூன்.
பச்சை மிளகாய்- 1
மிளகு- 3
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- கால் டீஸ்பூன்
சீரகப்பொடி- அரை டீஸ்பூன்
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கொத்தமல்லித்தழை புதினா இலைகளை நறுக்கி சுத்தம் செய்து எடுக்கவும். இஞ்சியை தோல் சீவி கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். தயிரைக் கடைந்து மோராக்கி, வெண்ணை நீக்கிவிட வேண்டும். நெல்லிக்காய், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் மற்றும் மிளகு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இதனை மோருடன் கலக்கி உப்பு, சீரகப் பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து கலந்துவிட்டு ஒரு டம்ளரில் ஊற்றி அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு மேலாக குடிக்கலாம்.
இதனை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே குடிக்கலாம். இதனை ஒரு டம்ளர் குடித்தால் ஓர் ஆயிரம் நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதன்படி வயிற்றின் அமிலத் தன்மை குறையும். மலச்சிக்கல் நீங்கும். உடலில் உஷ்ணத்தைத் தணித்து குளிர்ச்சியை கொடுக்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். செரிமானத்தைத் தூண்டும். கண்களை பாதுகாக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் நோய் தோற்று வராமல். உடல் எடையை சீராக வைக்கக் கூடியது. காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படும். வாய் துர்நாற்றத்தை போக்கும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். குமட்டல் சோர்வை போக்கும். மன சோர்வை தவிர்க்க உதவும். இதயத்துக்கும் மூளைக்கும் நன்மை செய்யும். சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும். வயிறு உப்புசத்தை தடுக்கும். இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் நிறைந்துள்ளன. அதனால் கோடைகாலத்தில் இதனை தினமும் குடிப்பது உடலுக்கு மிகமிக நல்லது