Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோடை வெயில் தாக்கத்தால்… அதிகரித்த தர்பூசணி வரத்து… விற்பனை மும்முரம்..!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாகையில் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோடை வெயிலின் தாக்கம் நாகையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாகையில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளதால் புதிதாக குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாகையில் நீர்மோர், தர்பூசணி, இளநீர், சாத்துக்குடி ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது.

நாகையில் குறிப்பாக தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. அந்த தர்பூசணி பழங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஒரு கிலோ தர்பூசணி ரூ.20 முதல் 25 வரை காடம்பாடி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு விற்கப்படுகிறது. இந்த பழங்களை அங்கு வரும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.

Categories

Tech |