Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட்டைக்கு வர சொன்னீங்க…! இன்னும் ஏன் டைம் கொடுக்கல… ஜெயக்குமார் விளாசல் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,ராமநாதபுரத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது, அனைத்து மாவட்டத்தினுடைய மீனவர் சங்கங்கள் உடைய பிரதிநிதிகளான கூட்டமைப்பினுடைய அந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. அந்த கூட்டத்தில் என்ன ?  இந்த மாதிரி மீனவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு ஒன்று, ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும், அதே நேரத்தில் இலங்கை,

கடற்படை தன்னுடைய தாக்குதலை நிறுத்துவதற்கு உண்டான தொடர்ந்து இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலே ஒரு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும் என்ற நிலையில் ஒரு நிலையை வந்து தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்ற அந்த ஒரு கோரிக்கையை வலியுறுத்தி இன்றைக்கு வந்து கூட்டம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் என்ன சொன்னாரு…  முதலமைச்சர் பொருத்தவரையில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் என்னுடைய கோட்டைக்கு வரலாம், நீங்கள் கலந்து ஆலோசித்து பிரச்சினைகளை கூறலாம். ஆனால் இந்த புதிய அரசு பொறுப்பேற்று அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு பொருத்தவரையில் முதலமைச்சர் சந்திப்பதற்கு தேதியை கேட்டு கூட இதுவரை முதலமைச்சர் சந்திக்க மறுத்திருக்கிறார். எனவே அப்படி மீனவருக்கு அநீதியை பொறுத்தவரையில் இந்த ஆட்சியிலே இழைக்கப்படுகின்றது.

கொரோனாவை பொருத்தவரையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , மூன்றாவது அலையை பற்றி எங்களால் உறுதியாக சொல்ல முடியாது என ஒரு சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார். அப்படி இருக்கின்ற நிலையில் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் திமுக அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 1500 இருந்து கொண்டு தான் இருக்கு. இன்னும் புதுசு புதுசாக வந்துகொண்டிருக்கிறது. அதை முழுமையாக கட்டுப்படுத்தி ஒரு மூன்றாவது அலைக்கு செல்லாமல் இருக்க வேண்டிய அந்த நடவடிக்கைகளை கடுமையாக எடுக்க வேண்டும் என்றுதான் நான் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |