தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வேகத்திற்கு அரசு அதிகாரிகளும் ஈடுகொடுத்து செயல்பட்டு வருகின்றனர். அதில் இந்திய ஆட்சிப் பணியில் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் கொண்டிருந்த தலைமைச் செயலர் இறையன்பு மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பினர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து அரசு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதற்கான முக்கிய பணி அதிகாரிகளுக்கு தான் உள்ளது என்று முதல்வர் வேகத்திற்கு அவர்களை தலைமைச் செயலாளர் இறையன்பு இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். இதனிடையில் அவரது சகோதரர் திருப்புகழ் நியமனத்திற்காக பரிந்துரையில் இறையன்பு கையெழுத்து போடாததை அறிந்த ஸ்டாலின் வியந்துவிட்டார் என்று தகவல் வெளியானது. இவை அனைத்தும் சேர்ந்து ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள இறையன்புவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சில வாய்மொழி உத்தரவுகளையும் தனது அமைச்சரவை சகாக்களுக்கு ஸ்டாலின் வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து கோட்டை வட்டாரங்கள் கூறியது, தலைமைச் செயலகம் முழுவதும் இறையன்பின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அமைச்சர்களை தவிர மற்ற அமைச்சர்கள் தகவல் அல்லது வேறு காரணங்களுக்காக இறையன்பை தங்கள் அறைக்கு அழைக்கக்கூடாது அவர்களை தலைமைச் செயலாளராக நேரடியாகச் சென்று தகவலை கேட்டு பெற வேண்டும் என்கின்றனர். மேலும் இறையன்பு மீது ஸ்டாலின் வைத்திருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாது என்று அவர்கள் கூறினார்கள்.