கோட்டை அகழியில் வாலிபரை கொலை செய்யப்பட்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பெரிய பூங்கா அருகில் கோட்டை அகழியில் ஒரு ஆண் சடலம் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இத்தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். சடலமாக மீட்கப்பட்டவருக்கு தலையில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர்.
அதன்பின் நடத்திய விசாரணையில் இறந்தவர் ஆர்.என்.பாளையத்தில் வசித்த 26 வயதுடைய சுபேர் என்பதும், பேக்கரி கடையில் வேலை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியிருப்பதாவது, சுபேர் பெரிய பூங்காவில் வைத்து மர்ம நபர்கள் தாக்கி சிறிது தூரம் இழுத்து சென்றிருக்கிறார்கள். இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கிறது. மேலும் அகழி கரைப் பகுதியில் அவரின் நெற்றியில் கல்லால் தாக்கிக் கொலை செய்து இருக்கிறார்கள்.
இதனையடுத்து இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஆங்காங்கே தரையில் ரத்தக் கறைகள் இருக்கின்றது. அவரைக் கொலை செய்யப்பட்டு மூன்று தினங்கள் ஆன நிலையில் உடல் அழுகி காணப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர் யார்? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.