நாட்டில் விவசாயிகளிடம் கோட் சூட் போட்டுக் கொண்டு பொய்களை பரப்பும் அரசு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என அரசு தெரிவித்தது. ஆனால் அவர்களது நண்பர்களின் வருமானம்தான் நான்கு மடங்கு அதிகரித்தது. இதற்கு நேர்மாறாக விவசாயிகளின் ஊதியம் பாதியாக குறைந்தது. கோட் சூட் போட்டுக்கொண்டு பொய்களை பரப்பி கொள்ளையடிக்கும் அரசு” என அவர் கூறியுள்ளார்.