கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணகாடு கொடிவள்ளி பகுதியை சேர்ந்தவர் மம்மிக்கா. இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பதால் வழக்கமாக இவர் சட்டையும் லுங்கியும் அணிவது வழக்கம். இவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது புகைப்பட கலைஞர் ஷரீக் வயலில் இவரை பார்த்து உள்ளார். இவரை பார்த்தவுடன் போட்டோக்களை எடுத்து அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோக்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் ஷரீக் தனது ஆடையாகத்திற்கு விளம்பர மாடலை தேடினார்.
ஒரு வார இடைவெளியில் எத்தனையோ பேரை பார்த்தாலும் அவருக்கு திருப்திகரமாக இல்லை. இதனால் மம்மிக்காவையே கேட்டுள்ளார். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டு அவரது கெட்டப்பை முழுமையாக மாற்றினார் ஷரிப். முடி திருத்தம், பேசியல், கோட் சூட், கூலர்ஸ் என கூலாக ஐபேடுடனும்,லேப்டாப்புடனும் மம்மிக்கா கொடுத்த போஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கடந்த வாரத்தில் ஷரீக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மம்மிகாவின் மாடலிங் விளம்பரம் ஏராளமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் மம்மிக்கா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தின கூலி வேலைக்கு மத்தியில் இதுபோன்ற மாடலிங் வாய்ப்புகள் வந்தால் அதையும் செய்ய ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.