Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு….. அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துபாய் சென்று வந்துள்ள முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள எழுமலை மற்றும் செல்லம்பட்டி பகுதியில், வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவருடன் இணைந்து உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பனும் தொடங்கி வைத்துள்ளனர். அதன்பின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளதாவது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துபாய் சென்று 4000 கோடி முதலீட்டை பெற்று வந்தபோது திமுக அரசு ஏளனம் செய்ததை சுட்டிக் காட்டினார். இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்று பல குளறுபடிகளை செய்துவிட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் கூறியுள்ளது போல், துபாய் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது முதல் செம்மொழி பாடல் ஒலித்தது வரை வெறும் நாடகமாகவே நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ‘கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு என முதல்வரை பார்த்து, மக்கள் கேள்வி கேட்கிறார்கள்’ என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர்,  5 ஆயிரம் கோடி வரை முதலீடு பெற்றதாக கூறும் திமுக அரசு மீதும் மற்றும் அவர்கள் குறிப்பிட்ட கட்டிட பணிகளுக்கான முதலீட்டின் மீதும்  பல்வேறு சந்தேகங்கள் தோன்றி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |