ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் உள்ளிட்ட உலக விவகாரங்களால் சென்ற சில நாட்களாக உலகஅளவில் கோதுமை விலையானது ஏறி வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு கூறியதாவது, “சர்வதேச அளவில் கோதுமை விலை அதிகரித்து வருகிறது. அதன்பின் இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் அடிப்படையிலும், அண்டை நாடுகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது.
எனினும் சிலருக்கு மட்டும் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் கோதுமை ஏற்றுமதி செய்பவர்கள் முன்பே வெளிநாடுகளிலிருந்து கோதுமைக்கான தொகையை பெற்றதற்கான கடிதத்தை வைத்து இருந்தால் அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.