நாடு முழுவதும் கோதுமை மாவு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போதைய விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் கொள்கையில் சில மாற்றங்கள் செய்து கட்டுப்பாடுகளை அமல்படுத்த கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போரால் உலகம் முழுவதும் கோதுமை மற்றும் அதன் மாவுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இருப்பினும் இந்தியாவில் கோதுமை போதுமான அளவு இருப்பதாக ஏற்றுமதி செய்யப்பட்டது.இந்நிலையில் நடப்பு ஆண்டு கோதுமை விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்ததால் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.