கோத்தகிரி அருகே தொழிலாளியை கரடி துரத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே இருக்கும் உயிலட்டி பகுதியில் 3 கரடிகள் அட்டகாசம் செய்து வந்ததையடுத்து வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள். நேற்று முன்தினம் 2 கரடிகள் கூண்டில் பிடிபட்ட நிலையில் மற்றொரு கரடி மற்றும் கூண்டில் சிக்காமல் அங்கிருந்து தப்பித்து விட்டது. இதனால் தப்பிச்சென்ற கரடியை பிடிப்பதற்காக அப்பகுதியில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டிருக்கின்றது.
அந்த கரண்டி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சுற்றி வருகின்றது. இந்நிலையில் குன்னியட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஹலான் என்பவர் தேயிலை தோட்டத்தில் பறித்த இலை மூட்டைகளை சுமந்து சென்ற போது அவரை கரடி துரத்தியுள்ளது. இதனால் அவர் மூட்டைகளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆகையால் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.