கோத்தகிரி அருகே புதிய குடிநீர் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சியில் உள்ள அரவேனு பஜார் பகுதிகளில் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தனியாக கிணறு இல்லாத நிலையில் புதிய கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்த நிலையில் அதற்கான திட்டத்தின் கீழ் ரூபாய் 21 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலையோரத்தில் குடிநீர் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதற்கு ஊராட்சித் தலைவர் தலைமை தாங்க செயலாளர், மாவட்டம் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.