கோத்தகிரி ஈளாடா பகுதியில் புதிய நிழற்குடை விரைவில் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் பல சிறிய கிராமங்கள் இருக்கின்ற நிலையில் அதில் முக்கிய சந்திப்பாக ஈளாடா கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி தனியார் எஸ்டேட்கள், பாரதி நகர், காந்தி நகர், கதகத் துறை என பல கிராமங்கள் இருக்கின்றது. இங்கே 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்ற பல வருடங்களாக பயன்படுத்தி வந்த நிழற்குடை சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பழுதடைந்த காரணத்தினால் இடிக்கப்பட்டது.
மேலும் புதிதாக நிழல் கூடை கட்டி தரப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் நான்கு மாத காலமாகியும் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், பயணிகள் பேருந்திற்காக காத்திருக்கும் பொழுது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். இதனால் விரைவில் நிழற்கூடை அமைத்து தருமாறு கேட்கின்றனர். ஆகையால் புதிய நிழற்குடை விரைவில் கட்டி தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.