இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது.
இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத் பையா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். இவர் எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
ஆனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். மேலும் அதிபரின் ராஜினாமா கடிதம் கிடைக்கப்பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்று கிடைக்கப்பெறும் என்று சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்.