இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக கொந்தளிப்புக்குள்ளான அந்நாட்டு மக்கள் இதற்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் எனகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரமடைந்ததை அடுத்து ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பிஓடினார். இதையடுத்து அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய தன் அதிபர் பதவியை ராஜினமா செய்தார்.
அதன்பின் சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த 11-ஆம் தேதி தாய்லாந்துக்கு சென்றார். தலை நகர் பாங்காக்கிலுள்ள ஓட்டல் அறையில் தங்கி இருக்கும் அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள்ளே இருக்கும்படி தாய்லாந்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் கோத்தபயராஜபக்சே அடுத்தவாரம் தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பவார் என்று அவரது உறவினரான உதயங்க வீரதுங்கா கூறினார்.
அந்த வகையில் வரும் 24-ஆம் தேதி கோத்தபயராஜபக்சே இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையில் அவருக்கு எதிரான எதிர்ப்பு குறையாததால் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோத்தபயராஜபக்சே திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவருக்கும், அவரது மனைவி லோமா ராஜபக்சேக்கு சேர்த்து கிரீன்கார்டு கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.