Categories
சினிமா தமிழ் சினிமா

கோபத்தின் உச்சகட்டத்தில் ரசிகர்கள்.. மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு..!

நடிகர்களை அவதூறு பேசியதால் மீராமீதுனின் உருவபொம்மை எதிர்க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில்  பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் கடந்த சில தினங்களாக நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யாவை பற்றி ஆபாச வார்த்தைகளால் பேசி வருகிறார். அவர்களை பேசுவதோடு மட்டுமல்லாமல்  அவர்கள் குடும்பத்தாரையும் அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களின் ரசிகர்கள் அவர்களது பொம்மைகளை எரித்தும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டியும் தங்களது ஆவேசத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.  

மீரா மிதுன் சர்ச்சை வெளியான நாட்களிலிருந்தே ரசிகர்கள் அவரை எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் திருந்தாத மீராமிதுன் மீண்டும் அவர்களது குடும்பத்தாரை அவதூறாகப் பேசியது ரசிகர்களின் மத்தியில் பெரும் கோபத்தை எழுப்பியுள்ளது. இதன் விளைவாக புதுச்சேரி காவல் நிலையத்தில் கலாம் சேவை மையம் சார்பில் புகார் மனு அளித்தனர். எனினும் அப்புகார் மனுவையும் கிண்டலடித்ததால் அவரின் உருவ பொம்மைகளை கலாம் சேவை மையத்தினர் எரித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Categories

Tech |