பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு புதிய மனிதா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அர்ச்சனா தலைமையிலான ரோபோட் அணிக்கும் பாலா தலைமையிலான மனிதர்கள் அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் மனிதர்களின் உணர்வுகளான மகிழ்ச்சி, துக்கம், கோபம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து மனிதர்கள் அணி வர வைக்க வேண்டும் . அதனால் அனிதா மேக்கப் ரோபோ என சிவானியிடமும் ராஜா வீட்டு கண்ணுக்குட்டி என ரமேஷ்ஷிடமும் கூறி உசுப்பேற்றி பார்க்கிறார் . இதையடுத்து அனிதா முட்டையை உடைத்து அதை அர்ச்சனா முகத்தில் தடவ வைக்கிறார் .
பின்னர் நிஷா மற்றும் ஆரி முன்னிலையில் அர்ச்சனா கண்களில் கண்ணீர் சிந்துகிறது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் அர்ச்சனாவிடம் யார் என்ன கூறினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் கோபத்தின் உச்சிக்கே சென்று அனைவரயும் திட்டி தீர்த்து விட்டு கதறி அழுகிறார் அர்ச்சனா . அவரை சமாதானப்படுத்த பாலா ,நிஷா ஆகியோர் முயற்சிக்கின்றனர் ஆனால் அர்ச்சனா சமாதானம் ஆகவில்லை என்று தெரிகிறது. இப்படியாக மிகப் பரபரப்பாக வெளியான இரண்டாவது புரோமோவால் ரசிகர்கள் இன்றைய எபிசோடைக்காண ஆவலாக உள்ளனர்.
#Day65 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/OGv65X8BvJ
— Vijay Television (@vijaytelevision) December 8, 2020