நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, சிவகாசி மாநகராட்சியை பொருத்தவரை அதிமுக செய்த சாதனைகள் பல. ஆயிரக்கணக்கில் புதிய பேருந்துகளை சிவகாசி அர்ப்பணித்தவர் எடப்பாடி பழனிசாமி. சிவகாசியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என தீவிர முயற்சியை மேற்கொண்டது அதிமுகதான். பல்வேறு நலத் திட்டங்களால் சிவகாசி மக்கள் அதிமுகவினர் மீது நன்மதிப்பை வைத்துள்ளனர். அந்த நன்மதிப்பை பயன்படுத்தி நாம் தாராளமாக சிவகாசி மக்களிடம் ஓட்டு கேட்கலாம். அவற்றையெல்லாம் விபரமாகக் கூறி நீங்கள் சிவகாசி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என வேட்பாளர்களை நோக்கி கூறினார். அதோடு யாரையும் குறை கூறி நாம் வாக்கு சேகரிக்க வேண்டாம். குறை கூறுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நான் அறிவேன். அதிமுக செய்த சாதனைகளையும் அதனால் மக்களுக்கு கிடைத்த நன்மைகளையும் கூறுங்கள் போதும் அதுவே நம்முடைய வெற்றிக்கு வழிவகுக்கும்.
பிறரை குறை கூறுவதால் நமக்கு நிறைய பாதகங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு எளிய மக்களுக்கு உரிமை கொடுக்கப்படவில்லை என்பதை நான் ஏற்கனவே உணர்ந்து விட்டேன் என அவர் கூறினார். இதனால், கூட்டணி கட்சியினரும் சிங்கம் போல் கர்ஜித்து வந்த ராஜேந்திர பாலாஜி தற்போது சிறு நரி போலப்ப பதுங்குகிறார். இதற்கெல்லாம் காரணம் சிறைவாசம் சென்றதுதான் என எண்ணி தற்போது திமுகவை பற்றி பேசுவதில் இருந்து சற்றே பின்வாங்கி வருகின்றனராம். இது குறித்து அறிந்த திமுக தலைமை அவர் மீது கடுப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.