இரவின் நிழல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார் பார்த்திபன். இவருடைய இரவின் நிழல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று சென்னை சேத்துப்பட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பார்த்திபன், ஏஆர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்போது ஏஆர் ரகுமான் பேசியதாவது, பார்த்திபனின் இரவில் நிழல் திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும்.
தமிழ் திரைக்கலைஞர்களிடம் பல திறமைகள் இருக்கின்றது. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்” என கூறினார். இதையடுத்து பார்த்திபன் பேசும் பொழுது அவருடைய மைக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேலை செய்யாமல் போனது. அதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் இருக்கையிலிருந்து எழுந்து மைக்கை வீசினார். இதைப்பார்த்த ஏ ஆர் ரகுமான் அதிர்ச்சியடைந்தார். பின் பார்த்திபனுக்கு வேறொரு மைக் தரப்பட்டது. இதையடுத்து பார்த்திபன் பேசியதாவது, நான் செஞ்சது அநாகரிகமான செயல். இதற்காக வருத்தப்படுகிறேன்” என மன்னிப்பு கேட்டார்.