Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோபத்தில் வெளியேறிய மனைவி…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குடும்பத்தகராறு காரணமாக தொழிலாளி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் இருக்கும் கோலியனூரில் தொழிலாளியான அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில்  அய்யனாருக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அய்யனாருக்கும்,  அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது  ஆத்திரமடைந்த அய்யனாரின் மனைவி 2 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலத்திலுள்ள திருபுவனை பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அய்யனார் வீட்டில் வைத்து  விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இவரைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அய்யனாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளவனூர் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |