Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை சூழ்ந்த பகுதி என்பதால் சிறந்த சுற்றுலா மையமாக விளங்கும் கொடிவேரி அணை, குண்டேரிப்பள்ளம் அனை உள்ளதாலும் கடந்த 40 ஆண்டுகளாக அதிக அளவில் படப்பிடிப்பு நடைபெறுகின்றன. இதனால் குட்டி கோடம்பாக்கம் என்றும் கோபிசெட்டிபாளையம் அழைக்கப்படுகிறது. கோபிசெட்டிபாளையம் 1952 இல் முதன்முதலாக சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த தேர்தல்களில் 9 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
தொடக்கத்தில் 3 தேர்தல்களில் காங்கிரஸ், ஒருமுறை சுதந்திரா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஏற்கனவே 6 முறை கோபிசெட்டிபாளையத்தில் எம்எல்ஏவாக தேர்வான அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் 2016 தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் மொத்தம் 2,50,638 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களே அதிகம். ஈரோடு மாவட்டத்தில் கோபி பகுதியிலேயே அதிகமாக பயிரப்பட்டு வருகின்றது. தற்போது மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் வேறு பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றன.
கோபி நகரில் முக்கிய வடிகாலாக கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ள சேதங்களை தடுக்க கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை காணல் நீராகவே உள்ளது. அதை போன்று குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். புறவழி சாலை திட்டம், மேம்பால வசதி, மஞ்சள் கொள்முதல் மையம், பட்டுக்கூடு விற்பனை மையம் அமைக்க வேண்டும் என்பவையும் நீண்டகால கோரிக்கைகள். தடப்பள்ளி வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதால் விவசாயம் பாழாகி வருகிறது.
விரைவில் நிலம் வாங்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று 15 ஆண்டுகளாக தற்போதய அமைச்சர் செங்கோட்டையன் கூறி வருவதாக மக்கள் குமுறுகின்றனர். அதேபோன்று கீழ்பவானி பாசன வாய்க்காலின் பக்கவாட்டில் மட்டுமே கான்கிரீட் சுவர் அமைக்க உள்ளதற்கும், வாய்க்காலின் கீழ்பகுதியில் காங்கிரீட் பலகை மட்டுமே அமைக்கப்படுவதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் எதிர்ப்பை மீறி திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் தீவிரம் காட்டுவது தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |