Categories
தேசிய செய்திகள்

“கோபித்துக் கொண்ட தாய் வீட்டிற்கு சென்ற மனைவி” அரசு ஊழியரின் விடுப்பு கடிதம்…. இணையத்தில் வைரல்…!!!

அரசு ஊழியரின் விடுமுறை கடிதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷம்சாத் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்வித்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக அகமதுவின் மனைவி கோபித்துக் கொண்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து அகமது தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக அலுவலகத்திற்கு விடுப்பு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் என்னுடைய மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். எனவே எனக்கு 3 நாட்கள் விடுமுறை வேண்டும் என எழுதியுள்ளார். அவருக்கு உடனடியாக விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் அகமதுவின் விடுமுறை கடிதம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அகமதுவின் கடிதம் இணையதளத்தில் வைரலானதால் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |