Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோப்பையை கைப்பற்றனும்”…. வாழைப்பழத்தியில் எழுதி…. ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரசிகர்கள் வழிபாடு…!!

 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற ரசிகர்கள் வழிபாடு செய்துள்ளனர் .

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 13 தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த 13 போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு தடவை கூட வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதே இல்லை. இந்த அணி ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறுகின்றது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மதம் நடைபெற உள்ள ஐபில் தொடரில் எப்படியாவது பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும் சித்ரதுர்கா நகரில்  தெருமல்லேசுவரா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழாவின்போது ரசிகர்கள் “இந்த முறையாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணி வெற்றி பெற்று கோப்பையை பெற வேண்டும்” என்று வாழைப்பழத்தில் எழுதி அதை தேர் மீது தூக்கி வீசி வழிபாடு செய்துள்ளனர்.

Categories

Tech |