நியூசிலாந்து-நெதர்லாந்து அணிக்கான கடைசி ஒருநாள் போட்டி ஹால்மிட்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. இதனால் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இந்த மேட்சில் நியூசிலாந்து அணியின் வில்யங் 120 ரன்களும், கப்தில் 106 ரன்களும் எடுத்திருந்தார். இந்த அணி மொத்தம் 333 ரன்களை எடுத்திருந்தது. இதனையடுத்து நெதர்லாந்து அணி களமிறங்கியது. இதில் ஸ்டீபன் ஹார்பர் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.
ஆனால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நெதர்லாந்து அணி 42.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த மேட்சை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. மேலும் 115 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. இந்த மேட்சில் ஆட்ட நாயகன் என்ற விருதை வில்யங் பெற்றார். இந்த மேட்சின் முடிவில் நியூசிலாந்து அணி வீரர் ரோஸ் டெய்லர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.