இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நடந்த ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் சுற்றில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோற்றது. ஆர்சிபி அணி இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கிய ஐபிஎல் லீக் தொடரை சரியாக முடிக்கவில்லை . ஆர்சிபி அணியில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்குள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆர்சிபி அணி செய்த தவறுகளை நேற்றைய போட்டி முடிந்தவுடன் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட தொடங்கியுள்ளனர்.
அதில் சில விமர்சனங்கள் கேப்டன் விராட் கோலியின் கேப்ன்சி பற்றிவந்த நிலையில், கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய வீரர் கௌதம் கம்பீர் ஆவேசமாக பேசியுள்ளார். நானாக இருந்தால் கோலியை நிச்சயம் கேப்டன்சி பதவியிலிருந்து நீக்கி இருப்பேன். 8 ஆண்டுகளாக ஒரு தொடரில் ஒரு முறை கூட கோலியால் போட்டியை வெல்ல முடியவில்லை.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார் கம்பீர். இது அவரைப் பற்றிய விமர்சனம் தான். எனக்கும் கோலிக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை.8 வருடமாக கேப்டனாக வேண்டாம், அணியின் வீரராகவே கோப்பையை வெல்லாமல் எவராலும் பயணம் செய்ய முடியாது.
பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட அஸ்வினால் இரண்டு வருடமாக கோப்பையை வெல்ல முடியவில்லை எனவே உடனடியாக அடுத்த கேப்டனுக்கு சென்று விட்டார்கள். எம்எஸ் தோனி, ரோகித் சர்மா ஆகியோர் கேப்டனாக தங்களது அணிகளுக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆண்டுகளாகவும் வெற்றிகரமான கேப்டனாக தொடர்கிறார்கள். ஒருவேளை ரோகித் சர்மாவால் கேப்டனாக கோப்பையை வெல்ல முடியவில்லை என்றால் கேப்டன் பதவியில் இருந்து நிச்சயம் அவர் நீக்கப்பட்டிருப்பார்.
வெற்றிக்கான பங்கினை எடுத்துக்கொள்ளும் கோலி தோல்விக்கான பங்கினையும் எடுத்துக் கொண்டு பதவியிலிருந்து விலக வேண்டும். தொடக்க வீரராக திடீரென விராட் கோலி களமிறங்குகிறார். தொடக்க வீரராக களமிறங்க வேண்டுமென்றால் ஐபிஎல் ஏலத்தின் போதே நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை எடுத்திருக்க வேண்டும்.
ஆர்சிபி அணி ஒவ்வொரு ஆண்டும் விராட் கோலி ,டி வில்லியர்ஸ் ஆகியோரை நம்பியே உள்ளது. ஆர்சிபி அணி வெற்றி பெற்ற 7 போட்டிகளில் டி வில்லியர்ஸ் 3 போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இந்த ஆண்டு டி வில்லியர்ஸால் சிறப்பாக ஆட முடியவில்லையெனில் அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றார்.
கடந்த ஆண்டுசெயல்பட்டது போலவே இந்த ஆண்டும் ஒரு அணியாக செய்யப்பட்டுள்ளார்கள். ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள் ஐபிஎல் தொடரை வெல்வார்கள் என்று கருதமுடியாது.