கோப்ரா படத்திற்கு முன்பே சியான் 60 படம் ரிலீஸாகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள கோப்ரா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. மேலும் கொரோனா பரவல் காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோப்ரா வெளியாவதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் சியான் 60 படம் ரிலீஸாகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சியான் 60 படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வருகிற ஜூலை மாதம் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. மேலும் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.