பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே விலங்கு பசு மட்டுமே. அத்தகைய பசுவை மாட்டுப்பொங்கலன்று படையலிட்டு வணங்கினால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அதை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலா, சுமனை ஆகியவை. இவை அனைத்தும் பொன்னிறம், கருமை, வெண்மை, புகை மற்றும் சிவப்பு நிறம் ஆகிய வண்ணங்களில் இருந்தது. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றிலிருந்து வரும் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை.
இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சாபிஷேகம் என்று கூறப்படுகிறது. கோமாதாவின் 30 முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே கோமாதா பூஜை செய்யும் போது பசுவை முன்புறமாக தரிசிப்பதை விட பின்புறம் தரிசனம் செய்வது அதிக நன்மையைத் தரும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம்.
தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் எனும் பசு உலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் உள்ளது. பசுவை தெய்வமாக வழிபட்டால் பூலோகத்தை அடையும் பாக்கியம் உங்களுக்கு உண்டாகும். ஒரு கட்டு அகத்திக் கீரை கொடுத்தால் பலருக்கு அன்ன தானம் செய்த பலன் கிடைக்கும். அன்றோடு இருக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்தால் தங்கம் தானம் செய்த பலன் கிடைக்கும்.
மஞ்சள் வாழைப் பழங்களை பசுவிற்கு கொடுத்தால் ரிஷிகளுக்கு பல வகைகளை சமர்ப்பித்த பலன் உண்டு. அருகம்புல்லை அளித்தால் நோய்களையும் பாவங்களையும் போக்கி நற்பலனை கொடுக்கும். இவை அனைத்தையும் விட நல்ல உணவுகளை சமைத்து அதனை தலைவாழை இலையில் வைத்து அப்படியே பசுவிற்கும் இந்த கொடுத்தால் ஏழு தலைமுறை பித்ரு தோஷமும் நீங்கி குடும்பம் செழிக்கும். கடன் தொல்லை, தீராத வியாதி, கணவன் மனைவி ஒற்றுமை இன்மை ஆகியவை நீங்கிவிடும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து மலர் அணிவித்து வழிபட வேண்டும்.
பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவே அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமம். கோ பூஜையை செய்வதால் பண கஷ்டம் நீங்கி விடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். நீண்டகால மனக் குறைகள் நீங்கும். கோமாதா பூஜை செய்ய பக்தியும் நம்பிக்கையும் முக்கியமாகும். எனவே அனைவரும் கோமாதாவை வழங்கினால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.