நோய் தாக்குதலால் சினை மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் விவசாயியான தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் தேவேந்திரனுக்கு சொந்தமான சினை மாட்டிற்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை மருத்துவர்கள் மூலம் அந்த மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், அது பரிதாபமாக இறந்துவிட்டது.
இதனால் அந்த கிராமத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி நோய் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.