Categories
உலக செய்திகள்

கோமாவுக்கு சென்ற பெண்…. தடுப்பூசியால் ஏற்பட்ட சோகம்…. வெளியான முழு தகவல்….!!.

ஜான்சன் அண்ட் ஜான்சன் போட்டுக்கொண்ட பெண் வலிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா லாஸ் வேகாஸைச்  பகுதியைச் சேர்ந்த Emma Burkey என்ற பெண் ஏப்ரல் 1ஆம் தேதி ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

 

பின்னர் சிறிது நாட்களுக்குப் பின் வலிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார். Emma Burkey மூளையில் ரத்த கட்டிகள் இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது என்றும் அவர் சில வார்த்தைகள் பேசுவதாகவும் அவரின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். இதனிடையே அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டு மூளையில் ரத்த கட்டிகள் உருவான 9 வது நபர் Emma Burkey என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |