Categories
அரசியல்

“கோமியமும் சாணமும் தான் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்”… புரிஞ்சுக்கோங்க மக்களே… சிவராஜ் சிங் சவுகான் கருத்து…!!!

பசுவின் கோமியம் மற்றும் சாணம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போபாலில் நடைபெற்ற இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவு மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் பேசியதாவது: “பசுக்களின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை கொண்டு முறையான அமைப்பை ஏற்படுத்தினால் மாநில மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். சரியாகத் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டால் இவை இரண்டிலிருந்தும் உரம்  முதல் மருந்து வரை ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்யலாம்.

மத்திய பிரதேச சுடுகாடுகளில்மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்படும் வறட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. பசுக்கள் மூலம் அதிக லாபம் ஈட்டுவது எப்படி என்பது குறித்து கால்நடை மருத்துவர்களும், அறிஞர்களும் ஆய்வு செய்ய வேண்டும். பசுகள் மற்றும் காளைகளின் உதவி இல்லாமல் பல வேலைகள் நடக்காது. இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து தான் அரசு கால்நடை பராமரிப்பு மையங்களை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மையங்களை சிறப்பாக செயல்படுத்த முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |